April 18 , 2026
5 days
165
- பிரகதீஸ்வரர் கோயில் கல்வெட்டுகள் சிவாஜி மற்றும் அப்சல் கானுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க போரை விவரிக்கின்றன.
- மராத்தி மொழியில் எழுதப்பட்டுள்ள இக்கல்வெட்டுகள், விநாயகர் சன்னதிக்கு அருகிலுள்ள தென்மேற்குச் சுவர்களில் அமைந்துள்ளன.
- இவை இரண்டாம் சரபோஜி மன்னரின் காலத்தைச் சேர்ந்தவை மற்றும் போன்ஸ்லே வம்சத்தின் வரலாற்றைப் பதிவு செய்கின்றன.
- மகாராஷ்டிராவின் ஜவாலி கோட்டையில் நடந்த சந்திப்பின் போது சிவாஜி, புலி நகத்தைப் பயன்படுத்தி அப்சல் கானை எவ்வாறு கொன்றார் என்பதை அவை விவரிக்கின்றன.
- மருது சகோதரர்களுக்கு எதிரான போரின் போது ஆங்கிலேயர்களுக்கு இரண்டாம் சரபோஜி அளித்த ஆதரவையும் இக்கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
- மேலும், டேனிஷ் மிஷனரியான பிரடெரிக் கிறிஸ்டியன் ஸ்வார்ட்ஸ் மற்றும் தஞ்சாவூரில் மராத்தியர்களின் ஆட்சி குறித்த குறிப்புகளும் இவற்றில் இடம் பெற்று உள்ளன.

Post Views:
165