தேசியக் கல்விக் கொள்கையானது பள்ளிகளில் நடத்தப்பட இருக்கும் தனது அயல்நாட்டு மொழிகளின் உதாரணப் பட்டியலில் இருந்து மாண்ட்ரீன் அல்லது சீன மொழியை விலக்கியுள்ளது.
உயர் தரத்திலான இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்துடன் சேர்த்து கொரிய மொழி, ஜப்பானிய மொழி, தாய், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், போர்ச்சுக்கல் மொழி, ரஷ்ய மொழி ஆகிய அயல்நாட்டு மொழிகள் இடைநிலைக் கல்வி நிலையில் கற்பிக்கப்பட உள்ளன.