சுந்தரவன புலிகள் வளங்காப்பகத்தை (STR) சுமார் 1,100 சதுர கிலோமீட்டர்கள் அளவில் விரிவுபடுத்துவதற்கான திட்டம் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சகத்திடம் (MoEF&CC ) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விரிவாக்கம் ஆனது காப்பகத்தின் மொத்தப் பரப்பளவை 3,629.57 சதுர கிலோ மீட்டராக அதிகரித்து, அதனை இந்தியாவின் இரண்டாவது பெரிய புலிகள் வளங் காப்பகமாக மாற்றும்.
தேசிய புலிகள் வளங்காப்பு ஆணையம் (NTCA) ஆனது ஏற்கனவே இந்த விரிவாக்கத்திற்கான தொழில்நுட்ப ஒப்புதலை வழங்கியுள்ளது.
புதிய பகுதியில் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள ராய்டிகி, மாட்லா மற்றும் ராம்கங்கா வனப்பகுதிகள் அடங்கும்.
80 புலிகள் STR காப்பகத்திற்குள்ளும் மற்றும் 21 அருகிலுள்ள காடுகளிலும் உள்ளதுடன் தற்போதைய புலிகளின் எண்ணிக்கை 101 என மதிப்பிடப்பட்டுள்ளது.