கேரளாவின் பொன்னிறக் குள்ளநரிகளின் (கேனிஸ் ஆரியஸ் நரியா) எண்ணிக்கை 20,000 முதல் 30,000 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2,200க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் சுமார் 900 கிராமங்களில் மேற்கொள்ளப் பட்ட இந்த ஆய்வில் மாநிலம் முழுவதும் 5,000 நரிகள் பதிவு செய்யப்பட்டது.
பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் 2 சதவீதம் மட்டுமே பதிவாகின, என்பதோடு அதில் பெரும்பாலானவை 200 மீட்டருக்கும் குறைவான உயரத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் இருந்தன.
தென்னை தோப்புகள் (24 சதவீதம்), கிராமப்புறக் குடியிருப்புகள் (10 சதவீதம்), நெல் வயல்கள் (8 சதவீதம்), இரப்பர் தோட்டங்கள் (6 சதவீதம்) மற்றும் நகர்ப்புறங்கள் (5.6 சதவீதம்) ஆகியவை அவற்றின் விருப்பமான வாழ்விடங்களில் அடங்கும்.
கண்ணூர், கோழிக்கோடு, திருச்சூர், எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய சில இடங்களில் அவை அடிக்கடி தென்படுகின்றன, ஆனால் மேற்குத் தொடர்ச்சி மலைகள், ஆலப்புழா கடற்கரை மற்றும் அட்டப்பாடியில் பொருத்தமற்ற வாழ்விடங்கள் காரணமாக அவை குறைவாகவே காணப்படுகின்றன.
மூணாறு மற்றும் எராவிக்குளம்/இரவிகுளம் தேசியப் பூங்காவில் தனிமைப் படுத்தப் பட்ட குழு காணப்படுகிறது என்பதோடு இது அதிக உயரமுள்ளப் பகுதிகளுக்கான அவற்றின் ஓரளவிலான தகவமைப்பினைக் காட்டுகிறது.