சுபாஷ் சந்திரபோஸ் ஆப்தா பிரபந்தன் புரஸ்கார்
February 8 , 2024
462 days
460
- 2024 ஆம் ஆண்டிற்கான சுபாஷ் சந்திரபோஸ் பேரிடர் மேலாண்மை விருதிற்கு உத்தரப் பிரதேசத்தின் 60 பாராசூட் ஃபீல்டு மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- இந்த விருதானது பேரிடர் மேலாண்மையில் சிறப்பாகப் பணியாற்றிய அமைப்புகளுக்கு / நபர்களுக்கு மதிப்பளிக்கும் விதமாக மத்திய அரசால் வழங்கப் படுகிறது.
- 60 பாராசூட் ஃபீல்டு மருத்துவமனையானது 1942 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
- இந்திய ஆயுதப் படைகளின் ஒரே வான்வழி-மருத்துவ நிறுவனம் இதுவாகும்.
- உலகளாவிய நெருக்கடிகளில் அதன் மகத்தான சேவைக்காக இதை நிறுவனத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

Post Views:
460