TNPSC Thervupettagam

சுயசார்பு மீன்வளர்ப்பு – சிக்கிம்

November 12 , 2026 2 days 37 0
  • பிரதான் மந்திரி மத்சய சம்பதா யோஜனா (PMMSY) திட்டத்தின் கீழ், இந்தியாவின் முதல் இயற்கை மீன்வளக் குழுமம் சிக்கிமின் சோரெங் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
  • நுண்ணுயிர் எதிர்ப்பிகள், இரசாயனங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் இல்லாத மீன்களை உற்பத்தி செய்வதற்காக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தால் இந்த முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.
  • இது நிலையான மீன் வளர்ப்பை ஊக்குவிப்பதுடன், நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளை மாசுபடாமல் பாதுகாக்கிறது.
  • தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (NABARD) உள்கட்டமைப்பு, திறன் மேம்பாடு மற்றும் மீன் வள அடிப்படையிலான விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு (FFPOs) ஆதரவளிக்கும்.
  • மீன் உற்பத்தி, உள்கட்டமைப்பு, சந்தைப்படுத்தல் மற்றும் மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்போரின் நலனை மேம்படுத்துவதற்காக 2020 ஆம் ஆண்டில் ₹20,050 கோடி முதலீட்டில் PMMSY திட்டம் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்