புதிதாகத் தொழில் தொடங்கும் தொழில் முனைவோர்களுக்காக இந்த ஆண்டு ஜூன் 5 ஆம் தேதியன்று சுவலம்பன் விரைவு இரயில் தொடங்கப்படும் என்று இந்திய சிறு தொழிற்துறை வளர்ச்சி வங்கி (SIDBI - Small Industries Development Bank of India) அறிவித்துள்ளது.
இந்த விரைவு இரயிலானது 15 நாட்களில் 11 நகரங்களுக்குப் பயணம் மேற்கொண்டு, 7000 கிலோ மீட்டர் தொலைவை உள்ளடக்க இருக்கின்றது. இது, அதன் “சுவலம்பன்” என்ற தலைமைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இந்தத் திட்டத்தின் கீழ், இளைஞர்கள் சில கருத்தாக்கங்களுடன் பயிற்சி பெற இருக்கின்றனர். இவர்கள் பல்வேறு தொடர் சோதனை முயற்சிகளுக்குப் பின்னர் திறனுள்ள வணிகத் திட்டத்தைப் பெற இருக்கின்றனர்.