TRIFED அமைப்பானது பழங்குடியினர் தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்காக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களுடன் இணைந்து மாற்றம் காணும் வகையிலான “பழங்குடியினருக்கான தொழில்நுட்பம்” என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இது 5 கோடி பழங்குடியினத் தொழில்முனைவோரை மேம்படுத்த இருக்கின்றது.
இது மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்துறை அமைச்சகத்தினால் ஆதரிக்கப் படுகின்றது.
இது பிரதான் மந்திரி வன்தன் யோஜனா (PMVDY) என்ற திட்டத்தின் கீழ் பதிவு செய்யப் பட்டுள்ள, வனங்களில் உற்பத்தியாகும் பொருட்களைச் சேகரிக்கும் பழங்குடியினருக்கு தொழில்முனைவுத் திறனைப் பயிற்றுவிப்பதையும் அவர்களுக்கு திறன்களைக் கட்டமைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது தரமான சான்றிதழ்களுடன் சந்தையிடல் பொருட்களுக்கான வணிகத்தை மேற்கொள்வதற்கு அவர்களை ஊக்குவிப்பதையும் வசதியை ஏற்படுத்தித் தருவதன் மூலம் பழங்குடியினத் தொழில் முனைவோரின் உயரிய வளர்ச்சி விகித்தையும் உறுதி செய்ய இருக்கின்றது.
வன்தன் திட்டம் பற்றி
வன்தன் திட்டம் என்பது மத்தியப் பழங்குடியின விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் TRIFED அமைப்பு ஆகியவற்றின் ஒரு முன்னெடுப்பாகும்.
இது பழங்குடியினப் பொருட்களின் மதிப்புக் கூட்டலின் மூலம் பழங்குடியினரின் வருமானத்தை அதிகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் உள்ளூர் ரீதியாக கேந்திரங்கள் முன்மொழியப் பட்டுள்ளன.
இவை வன்தன் சுய உதவிக் குழுக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு மேலாண்மைக் குழுவினால் நிர்வகிக்கப் படுகின்றன.