TNPSC Thervupettagam

இந்தியாவில் முழுமையான ஊரடங்கு

March 25 , 2020 1869 days 575 0
  • இந்தியாவில் கோவிட் – 19 பரவி வரும் நிலையில், மார்ச் 25 ஆம் தேதியிலிருந்து அடுத்த 21 நாட்களுக்கு இந்தியா முற்றிலும் முடக்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.
  • கொரானா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக இந்திய அரசு ரூ.15,000 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.
  • இந்த நிதியானது நாட்டில் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த பயன்படுத்தப்பட இருக்கின்றது.
  • இது 2005 ஆம் ஆண்டின் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தைச் செயல்படுத்துகின்றது.
  • கோவிட் – 19 ஆனது ஒரு “அறிவிக்கப்பட்ட பேரிடராக” அறிவிக்கப் பட்டுள்ளது. 
  • மத்திய உள்துறை அமைச்சகமானது இந்த முடக்கத்தின் போது தொடர்ந்து செயல்படும் வணிக அமைப்புகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
  • மின் உற்பத்தி அலகுகள், பெட்ரோல் நிலையங்கள், குளிர்ப் பதனக் கிடங்குகள், தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள், உணவு & மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவம் சார் சேவைகள் ஆகியன இதில் அடங்கும்.
  • மத்திய அரசனாது நாட்டின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவையும் வேறு சில பகுதிகளில் பிரிவு – 144ஐயும் பல பகுதிகளில் ஒட்டுமொத்த முடக்கத்தையும் அறிவித்துள்ளது.
  • கூடுவதற்கான அனுமதி  சில கட்டுப்பாடுகளோடு நடைமுறையில் இருந்தால் அந்த நடவடிக்கை “முடக்கம்” என்று அழைக்கப் படுகின்றது.
  • இருப்பினும், இந்தச் சூழ்நிலையில் அத்தியாவசியச் சேவைகள் வழக்கம் போல் கிடைக்கப் பெறும்.
  • இந்த முடக்கமானது மாவட்ட ஆட்சியர் அல்லது தலைமை மருத்துவ அதிகாரியினால் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றது.
  • பிரிவு 144ன் கீழ், இந்திய தண்டனைச் சட்டத்தின் படி மக்கள் ஒன்று கூடத் தடை செய்யப் பட்டுள்ளது. 
  • பிரிவு 144ன் கீழ், 5ற்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று கூட அனுமதி இல்லை.
  • அத்தியாவசியச் சேவைகள் முடக்கத்துடன் பிரிவு 144 என்ற உத்தரவும் பிறப்பிக்கப் பட்டால் அதுவே ஊரடங்கு உத்தரவு என்று அழைக்கப் படுகின்றது.
  • ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரமானது மாவட்ட ஆட்சியரிடமும் காவல்துறை ஆணையரிடமும் உள்ளது.
     

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்