TNPSC Thervupettagam
November 8 , 2025 12 days 97 0
  • வானியலாளர்கள் GJ 251 c என்ற பூமியை விட கிட்டத்தட்ட 4 மடங்கு நிறை கொண்ட ஒரு பாறைப்பாங்கான வெளிப்புறக் கோளினை கண்டறிந்துள்ளனர் என்ற நிலையில் இது 20 ஒளி ஆண்டுகளுக்கும் குறைவான தொலைவில் அமைந்த அருகிலுள்ள குள்ள நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது.
  • இந்தக் கிரகமானது, உயிரினங்கள் வாழக்கூடிய சூழல் கொண்ட, சரியான வளி மண்டலம் இருந்தால் திரவ நீர் இருக்கக் கூடிய "கோல்டிலாக்ஸ்" என்ற மண்டலத்தில்  அமைந்துள்ளது.
  • 20 ஆண்டுகளுக்கும் மேலான தரவுகளைப் பகுப்பாய்வு செய்து, வாழக் கூடிய மண்டல கிரக கண்டுபிடிப்பான் (HPF) கருவியைப் பயன்படுத்தி இந்தக் கண்டுபிடிப்பு கண்டறியப் பட்டது.
  • இந்தக் கிரகத்தின் ஈர்ப்பு விசையால் ஏற்படும் அதன் ஓம்பு நட்சத்திரத்தின் "திசை பிறழ்வினை" கவனிப்பதன் மூலம் ஆராய்ச்சியாளர்கள் இந்தக் கிரகத்தைக் கண்டு அறிந்தனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்