செந்நாய் (ஆசியக் காட்டு நாய்)
- பல ஆண்டுகள் இல்லாத தென்படாமல் இருந்த செந்நாய் ஆனது அசாமின் காசிரங்கா-கர்பி அங்லாங் நிலப்பரப்பில் மீண்டும் தென்பட்டுள்ளது.
- செந்நாய் ஆனது, ஆசியக் காட்டு நாய் என்றும் அழைக்கப்படுகிறது.
- செந்நாய் என்பது பெண் செந்நாய்களால் வழி நடத்தப் பட்டுக் கூட்டங்களாக வாழும் ஒரு குழுவாக சுற்றித் திரியும் மாமிச உண்ணியாகும்.
- இவை அடர்ந்தக் காடுகள், புதர் நிலங்கள் மற்றும் ஏராளமான இரைகளைக் கொண்ட மலைப்பகுதிகளை அதிகம் விரும்புகின்றன.
- இந்தியாவில், அவை மேற்குத் தொடர்ச்சி மலைகள், கிழக்குத் தொடர்ச்சி மலைகள், மத்தியப் பகுதிகள் மற்றும் வட கிழக்கின் சில பகுதிகளில் காணப்படுகின்றன.
- செந்நாய்கள் வன சுற்றுச்சூழல் அமைப்பில் இரை விலங்குகளின் சமநிலையை பேண உதவுகின்றன.
- இது IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் அருகி வரும் இனமாக வகைப்படுத்தப் பட்டுள்ளது.

Post Views:
37