நான்கு மேற்கு ஆப்பிரிக்க நாடுகளானது செனகல் – மௌரிடேனியன் நீர்வள வடிநிலத்திற்கான எல்லைகளைக் கடந்த ஒத்துழைப்பினை மேம்படுத்துவதற்கான ஒரு கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளன.
அந்த 4 நாடுகளாவன - காம்பியா, கினியா பிசாவோ, மௌரிடேனியா மற்றும் செனகல் ஆகும்.
இது குறித்த ஒத்துழைப்பிற்காக வேண்டி சட்டப்பூர்வ ரீதியிலான மற்றும் நிறுவனம் சார்ந்த ஒரு கட்டமைப்பினை நிறுவ இந்த நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.
இது மேற்கு ஆப்பிரிக்காவில் இவ்வாறான முதல் செயல்முறையாகவும் உலகளவில் பகிரப்பட்ட நிலத்தடி நீர் வளங்கள் குறித்த வலுவான ஒத்துழைப்பிற்கான ஒரு பாதைக்கும் வழிவகுக்கும்.
2018 ஆம் ஆண்டில் UNECE நீர்வள மாநாட்டில் இணைந்தவுடன் செனகல் இந்தப் பிரகடனத்தைக் கோரியது.