“மனதின் குரல்” என்ற தனது வாராந்திர வானொலி மூலம் ஊடாடும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, 2019 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தை ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடுமாறு தேச மக்களிடம் உரையாற்றினார்.
இது ‘போஷான் அபியான்’ (தேசிய ஊட்டச்சத்து திட்டம் – NNM/ National Nutrition Mission) என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக அனுசரிக்கப் படுகின்றது.
NNM என்பது மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஒரு முக்கியமான திட்டமாகும்.
இந்தத் திட்டமானது மூன்று ஆண்டுகளில் (2017-20) குறிப்பிட்ட கால இடைவெளியில் 0-6 வயதுடையக் குழந்தைகள், இளம் பருவப் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோர்களின் ஊட்டச் சத்து நிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பெண் குழந்தைகளின் ஊட்டச் சத்துக் குறைபாட்டை ஒழிப்பதற்காக இதே போன்ற ஒரு திட்டமான “பூர்ணா” என்று அழைக்கப்படும் ஒரு திட்டத்தை குஜராத் மாநில அரசு 2018 ஆம் ஆண்டில் தொடங்கியது.