செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குறை தீர்க்கும் அமைப்பு
January 2 , 2026 12 hrs 0 min 37 0
டெல்லி அரசாங்கம், கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்துடன் (IIT) கூட்டு சேர்ந்து, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குறை தீர்க்கும் அமைப்பை உருவாக்கியுள்ளது.
இந்த அமைப்பு நுண்ணறிவு சார் குறை தீர்க்கும் கண்காணிப்பு அமைப்பு (IGMS) என்று அழைக்கப்படுகிறது.
IGMS ஆனது பல குறை தீர்க்கும் வலை தளங்களை ஒரு ஒருங்கிணைந்த முகப்புப் பக்கத்தில் ஒருங்கிணைக்கும்.
புகார்களை பகுப்பாய்வு செய்து கண்காணிக்க இது செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திர கற்றல் (ML) ஆகியவற்றைப் பயன்படுத்தும்.
பொது சேவைகளில் மிகவும் விரைவான தீர்வு, சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் அதிக வெளிப்படைத் தன்மையை செயல்படுத்துவதை இந்த அமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
கான்பூர் IIT ஆனது அமைப்பின் ஒருங்கிணைப்பு, இணைய வெளிப் பாதுகாப்பு சோதனைகள் மற்றும் நீண்டகாலப் பராமரிப்பு ஆகியவற்றை ஆதரிக்கும்.