அசாம் மாநிலத்திலுள்ள காசிரங்கா தேசியப் பூங்காவானது செயற்கைக்கோள் தொலைபேசி இணைப்பு வசதியினைப் பெற்ற முதல் இந்திய தேசியப் பூங்காவாக மாறியுள்ளது.
வேட்டையாடுதலைத் தடுத்தல் மற்றும் ஒருங்கிணைந்தச் செயல்பாட்டினை உறுதி செய்தல் ஆகியவற்றில் உதவி வழங்குவதற்கான இந்த நடவடிக்கைகயானது நாட்டிலேயே முதல் வகையானதாகும்.
பி.எஸ்.என்.எல் நிறுவனம் ஆனது இதற்கான சேவை வழங்குநர் அமைப்பாக செயல்படும் அதே நேரத்தில், இதன் மாதாந்திரச் செலவினங்களுக்கு அப்பூங்காவின் அதிகாரிகள் பொறுப்பேற்பர்.