சமீபத்தில் உலக வங்கியானது “In the Dark: How Much Do Power Sector Distortions Cost South Asia” எனும் தலைப்பிலான ஒரு அறிக்கையை வெளியிட்டது.
இந்த அறிக்கையின்படி, இந்தியாவின் மின்உற்பத்தி துறையின் செயல்திறன் இடைவெளியானது ஒவ்வொரு ஆண்டும் பொருளாதாரத்தில் 4% அளவில் செலவை ஏற்படுத்துகிறது. இது 2016-ஆம் நிதியாண்டில் 86 மில்லியன் டாலருக்குச் சமமானதாகும்.
2016 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் நிலக்கரிப் பயன்பாட்டை எதிர்நோக்குவதில் தேவையை விட 14% பற்றாக்குறை இருந்தது.
2016 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட மின்சாரமானது பரிமாற்றம் மற்றும் விநியோகத்தின் போது ஏறக்குறைய 20% அளவிற்கு வீணாக்கப் பட்டுள்ளது. இந்த விகிதமானது உலகின் மிக உயர்ந்த இழப்பு விகிதமாகும்.
2018 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய போட்டித்திறன் அறிக்கையின்படி மின்சாரம் வழங்கலின் நம்பகத் தன்மையில் மொத்தமுள்ள 137 பொருளாதாரங்களில் இந்தியா 80வது இடத்தில் இருந்தது.