நிதி ஆயோக்கானது புதிய இந்தியாவிற்கான யுக்தி@75 எனும் பெயரிடப்பட்ட யுக்திசார் ஆவணத்தை வெளியிட்டு இருக்கின்றது.
இது இந்தியாவின் பொருளாதாரமானது 4 டிரில்லியன் டாலர் மதிப்பை எட்டுவதற்காக கட்டாயமாக எடுக்கப்பட வேண்டிய பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களைப் பற்றி விளக்குகிறது.
இந்தியாவின் வளர்ச்சியை ஆண்டுதோறும் 8% அதிகரிப்பதற்கும் அதனை 2022-23 ஆம் ஆண்டளவில் 9-10% அளவிற்கு மிக வேகமாக உயர்த்துவதற்கும் இத்தகைய பொருளாதார சீர்திருத்தங்களை நோக்கிச் செல்ல வேண்டும் என்பது இதன் முக்கிய கருத்தாகும்.