சைர்-அல்-பஹ்ர் – கடலின் சீற்றம் (Zair-Al-Bahr - Roar of the sea) 2021 எனும் 2வது இருதரப்பு கடற்படைப் பயிற்சியானது பாரசீக வளைகுடாவில் நடத்தப்பட்டது.
இந்தப் பயிற்சியானது இந்தியக் கடற்படைக்கும் கத்தார் அமீரக கடற்படைக்கும் இடையே நடத்தப் பட்டது.
இந்தக் கடற்படைப் பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்தியக் கடற்படைக் கப்பலான திரிகந்த் எனும் வழிகாட்டப்பட்ட, ஏவுகணையுடன் கூடிய ரேடாரில் புலப்படாத போர்க் கப்பலானது கத்தாரின் தலைநகரான தோஹாவை (Doha) வந்தடைந்தது.
இப்பயிற்சியானது தீவிரவாதம், கடல்கொள்ளை மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகியவை குறித்த ஈடுபாட்டினை கொண்டு மேற்கொள்ளப்பட்டது.