சிறந்த நடைமுறைகளுக்கான தேசிய உச்சி மாநாட்டின் போது, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகமானது ஜனனி - JANANI (கர்ப்பகால, பிரசவ மற்றும் பச்சிளங்குழந்தைப் பருவ ஒருங்கிணைந்த பராமரிப்பின் பயணம்) என்ற டிஜிட்டல் தளத்தைத் தொடங்கியது.
ஜனனி என்பது இந்தியா முழுவதும் தாய் மற்றும் சேய் சுகாதார சேவைகளைக் கண்காணிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் இனப்பெருக்கம் மற்றும் குழந்தை நல (RCH) இணையதளத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும்.
இத்தளம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான டிஜிட்டல் சுகாதார பதிவுகளை உருவாக்குகிறது; இது பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பு, பிரசவம், புதிதாகப் பிறந்த குழந்தை பராமரிப்பு மற்றும் குடும்பக் கட்டுப்பாடு சேவைகளை உள்ளடக்கியது.
இது QR-வசதி கொண்ட தாய் மற்றும் சேய் நலம் (MCH) அட்டைகள், அதிக ஆபத்துள்ள கர்ப்பத்திற்கான தானியங்கி எச்சரிக்கைகள் மற்றும் பரிசோதனைகள் & தடுப்பூசிகளுக்கான நினைவூட்டல்களை மக்களுக்கு வழங்குகிறது.
சிறந்த சுகாதாரக் கண்காணிப்பிற்காக U-WIN மற்றும் POSHAN போன்ற தளங்களுடன் ஜனனி ஒருங்கிணைக்கப்படுகிறதுடன் மேலும் இது தாய் மற்றும் குழந்தை இறப்பு விகிதங்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.