புதிய NPCI- NTT கூட்டாண்மையானது இந்தியப் பயணிகளுக்கான டிஜிட்டல் கொடுப்பனவுகளை எளிதாக்குவதையும், அதிக எண்ணிக்கையிலான பண வழங்கீட்டு விருப்பத் தேர்வுகளுடன் ஜப்பானிய வணிகர்களை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியச் சுற்றுலாப் பயணிகள் தற்போது ஜப்பானில் உள்ள NTT தரவு நிர்வகிக்கப் படும் வணிக இடங்களில் தங்கள் UPI செயலிகளைப் பயன்படுத்தி QR குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் பணம் செலுத்தலாம்.
NTT தரவு ஆனது ஜப்பானின் மிகப்பெரிய அட்டை சார் கட்டணச் செயலாக்க வலையமைப்பான CAFIS (கடன் மற்றும் நிதித் தகவல் மாறுதல் அமைப்பு) அமைப்பினை இயக்குகிறது.
தற்போது UPI ஏற்றுக் கொள்ளப்பட்ட நாடுகளில் பூடான், பிரான்சு, மொரிஷியஸ், நேபாளம், சிங்கப்பூர், இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் ஆகியவை அடங்கும்.