TNPSC Thervupettagam

இந்தியாவின் தங்க இருப்பு 2025

October 25 , 2025 7 days 53 0
  • இந்தியாவின் தங்க இருப்பு ஆனது முதன்முறையாக 100 பில்லியன் டாலர்களைத் தாண்டி, 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி நிலவரப்படி 102.37 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கியானது, ஒட்டு மொத்த அந்நியச் செலாவணி இருப்பில் 697.78 பில்லியன் டாலர் என்ற அளவிற்கு சிறிது குறைவு ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
  • அந்நியச் செலாவணி இருப்புகள் 5.61 பில்லியன் டாலர்கள் குறைந்து 572.10 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது என்பதோடு இது அந்நியச் செலாவணி இருப்புகளில் ஒட்டு மொத்தச் சரிவை ஏற்படுத்தியது.
  • சிறப்பு எடுப்பு உரிமைகள் (SDR) 18.68 பில்லியன் டாலர்களாகக் குறைந்துள்ளது.
  • சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) இந்தியாவின் இருப்பு நிலை 36 மில்லியன் டாலர்கள் குறைந்து 4.63 பில்லியன் டாலர்களாக உள்ளது.
  • இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பில் தங்கத்தின் பங்கு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது என்பதோடு, இது தங்க மதிப்பில் ஏற்பட்ட 3.60 பில்லியன் டாலர்கள் அதிகரிப்பால் அதிகரித்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்