TNPSC Thervupettagam

வைப்புதாரர்களுக்கான புதிய நியமன முறை

October 27 , 2025 5 days 32 0
  • வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) சட்டம், 2025 ஆனது, 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டது.
  • நியமனங்கள் தொடர்பான சட்டத்தின் பிரிவுகள் 10, 11, 12 மற்றும் 13, 2025 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.
  • வைப்புத்தொகையாளர்கள் வங்கிக் கணக்குகள், பாதுகாப்பான காப்பில் உள்ள பொருட்கள் மற்றும் பாதுகாப்புப் பெட்டகங்களுக்கு நான்கு நபர்களைப் பொறுப்பாளர்களாக பரிந்துரைக்கலாம்.
  • பரிந்துரைகளை ஒரே நேரத்தில் அல்லது தொடர்ச்சியாகவும் செய்யலாம் என்ற நிலையில் மேலும் ஒவ்வொரு பொறுப்பாளர்களின் பங்கும் தெளிவாகக் குறிப்பிடப் பட வேண்டும்.
  • தொடர்வரிசைப் பரிந்துரைகளில், அடுத்த பொறுப்பாளர் முதன்மை பொறுப்பாளரின் மரணத்திற்குப் பிறகுதான் முதன்மை பொறுப்பினை ஏற்பார்.
  • இந்தச் சட்டம் ஆளுகையை வலுப்படுத்துதல், வைப்புதாரர் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் உரிமை கோரல் தீர்வுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்