அந்தமான் & நிகோபர் தீவுகளில் குடை போன்ற வடிவமைப்புடன் கூடிய தொப்பி போன்ற அமைப்புடைய ஒரு புதிய கடல்பாசி இனமானது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தப் புதிய கடல்பாசி இனத்திற்கு சமஸ்கிருத வார்த்தையான ‘ஜலகன்யகா’ எனும் வார்த்தையைக் கருத்தில் கொண்டு ‘அசெட்டபுலேரியா ஜலகன்யகே’என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதன் பொருள் ‘கடல் தெய்வம் (அ) கடல் கன்னி’ என்பதாகும்.
இந்த இனமானது இந்தியாவில் கண்டறியப்பட்ட அசெட்டபுலேரியா இனத்தைச் சேர்ந்த முதலாவது இனமாகும்.