TNPSC Thervupettagam

ஜார்க்கண்ட் மாநில அரசின் OBC தரவுகள் சேகரிப்பு

May 6 , 2025 14 days 67 0
  • ஜார்க்கண்ட் மாநில அரசானது, மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினரின் (OBC) மக்கள் தொகை குறித்த தரவுகளைச் சேகரித்து முடித்துள்ளது.
  • இந்த தரவுச் சேகரிப்பு ஆனது "மும்முறை தேர்வின்" முதல் படியின் ஒரு பகுதியாகும்.
  • மும்முறை தேர்வு என்பது உள்ளாட்சி அமைப்புகளில் OBC ஒதுக்கீடுகள் நியாயமான மற்றும் அரசியலமைப்பு முறையில் தீர்மானிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக உச்ச நீதிமன்றத்தினால் வகுக்கப்பட்ட மூன்று படிநிலை வழிகாட்டுதலாகும்.
  • "மும்முறை தேர்வு" என்று அழைக்கப்படுபவற்றின் மூன்று படிநிலைகள் பின்வருமாறு.
    • உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட நிலையின் தன்மை மற்றும் தாக்கங்கள் குறித்து கடுமையான அனுபவம் சார் விசாரணையை நடத்துவதற்கு ஒரு பிரத்தியேக ஆணையத்தினை அமைத்தல்;
    • அவ்வாணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளில் தேவைப்படும் இட ஒதுக்கீட்டின் ஒரு விகிதத்தைக் குறிப்பிடுவதன் மூலம் அதிகப் படியான அளவு ஒதுக்கீடு செல்வதைத் தடுக்கலாம்; மற்றும்
    • SC/ST/OBC பிரிவுகளுக்கான இட ஒதுக்கீடானது மொத்த இடங்களில் 50 சதவீதத்தை தாண்டாமல் இருப்பதை உறுதி செய்தல்.
  • ஜார்க்கண்ட் மாநிலத்தில், இந்த OBC பிரிவுகள் சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப் பட்ட BC-I (பிற்படுத்தப்பட்ட வகுப்பு I) மற்றும் ஒப்பீட்டளவில் சிறந்த நிலையில் உள்ள BC-II (பிற்படுத்தப்பட்ட வகுப்பு II) வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.
  • தற்போது, இந்த ​​BC-I பிரிவின் கீழ் 127 சாதிகளும், BC-II பிரிவின் கீழ் சுமார் 45 சாதிகளும் உள்ளன.
  • மஹதோ/மஹதோ சாதியின் ஒரு துணைக்குழுவான குட்மி சமூகம், மிகப்பெரிய OBC சமூகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்