பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் உள்ள சிதாப்டியாராவில் நிறுவப்பட்டுள்ள 14 அடி உயர லோக் நாயக் ஜெயப் பிரகாஷ் நாராயண் சிலையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்தார்.
ஜெயப் பிரகாஷ் நாராயண் JP அல்லது லோக் நாயக் என்று வெகு பிரபலமாக அறியப் படுகிறார்.
இவர் ஒரு சுதந்திரப் போராட்ட ஆர்வலர், கோட்பாட்டாளர், சமூகவாதி மற்றும் அரசியல் தலைவர் ஆவார்.
இவருக்கு 1999 ஆம் ஆண்டில் (மரணத்திற்குப் பின்) பாரத ரத்னா விருது வழங்கப் பட்டது.