கேரளப் பல்கலைக்கழகம் ஆனது "The Ecology and Evolution of Cultural and Cooperative Behavior among Dolphins and Humans" என்ற தலைப்பிலான ஒரு சர்வதேச கூட்டு ஆராய்ச்சி திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இந்த ஆய்வானது, கேரளாவின் அஷ்டமுடி ஏரியில் இந்திய-பசிபிக் கூனல் (ஹம்ப்பேக்) ஓங்கில்கள் (டால்பின்கள்) மற்றும் மீனவர்களுக்கு இடையேயான கூட்டுறவு சார்ந்த மீன்பிடி நடத்தை (பரஸ்பரம்) குறித்து ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது, முதல் முறையாக, பிரேசில் மற்றும் மியான்மரில் காணப்பட்டவை உட்பட மூன்று கண்டங்களில் டால்பின்-மீனவர் இடையிலான ஒத்துழைப்பை ஒப்பிடும்.