தகவல் தொடர்பு அமைச்சகமானது டிஜிட்டல் நுண்ணறிவுப் பிரிவை அமைக்க முடிவு செய்துள்ளது.
UCC (unsolicited commercial communication) மற்றும் நிதி மோசடி வழக்குகள், குறிப்பாக டிஜிட்டல் கொடுப்பனவுகளில் வழங்கப்படும் புகார்களைக் கையாள இது ஒரு முதன்மை அமைப்பாக செயல்படும்.
டிஜிட்டல் நுண்ணறிவு பிரிவைத் தவிர, மோசடி நிர்வாகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பிற்கான தொலைத் தொடர்பு தகவல் ஆய்வு அமைப்புகள் 22 உரிமை சேவைப் பிரிவுகள் அளவில் அமைக்கப்படும்.
இது தொலைத் தொடர்பு வர்த்தக தகவல் தொடர்பு வாடிக்கையாளர் விருப்பத் தேர்வுகள் விதிமுறைகள் 2018 (TCCCPR - Telecom Commercial Communications Customer Preferences Regulations 2018) என்ற விதிமுறைகளின் கீழ் கண்டிப்பான இணக்கத்தையும் உறுதி செய்யும்.
இந்தியாவில் UCC அமைப்பை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு திருத்தப் பட்ட ஒழுங்குமுறைக் கட்டமைப்பை, தொலைத்தொடர்பு வர்த்தக தகவல் தொடர்பு வாடிக்கையாளர் விருப்பத் தேர்வுகள் மீதான விதிமுறைகள் வழங்குகிறது.