TNPSC Thervupettagam

மகாபாஹு-பிரம்மபுத்ரா திட்டம்

February 20 , 2021 1624 days 711 0
  • பிரதமர் அசாமில் ‘மகாபாஹு-பிரம்மபுத்ரா’ திட்டத்தை இணையவழியில் தொடங்கி வைத்தார்.
  • ரோ-பாக்ஸ் கப்பல் நடவடிக்கைகளின் தொடக்கமானது மகாபாஹு-பிரம்மபுத்ரா திட்டத்தின் துவக்கத்தைக் குறிப்பிடுகிறது.
  • ரோ-பாக்ஸ் கப்பல் நடவடிக்கைகள் நீமதிகாட் & மஜூலி, துப்ரி-ஹட்சிங்கிமாரி மற்றும் வடக்கு-தெற்கு குவஹாத்தி ஆகிய இடங்களுக்கு இடையே தொடங்கப்படும்.
  • இந்த திட்டத்தின் கீழ் ஜோகிகோபாவில் உள்ள உள்நாட்டு நீர்ப் போக்குவரத்து நிலையத்தின் தொடக்கமும் அடங்கும்.
  • மேலும் அவர் துப்ரி புல்பாரி பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
  • அசாமில் உள்ள துப்ரியை மேகாலயாவில் உள்ள புல்பாரி, துரா, ரோங்கிராம் மற்றும் ரோங்ஜெங் ஆகியவற்றுடன் இணைக்கும் வகையில் பிரம்மபுத்ரா ஆற்றின் மீது இது கட்டப்படும்.
  • அசாமில் மஜூலி பாலம் கட்டுவதற்காக வேண்டி அவர் பூமி பூஜையையும் செய்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்