TNPSC Thervupettagam

டிட்வா புயல்

December 3 , 2025 9 days 62 0
  • டிட்வா புயல் என்பது இலங்கை மற்றும் தென்னிந்தியாவிற்கு கனமழையைக் கொண்டு வந்த ஒரு வெப்பமண்டல புயல் ஆகும்.
  • "குளம்" என்று பொருள்படும் "டிட்வா" என்ற பெயர் ஆனது ஏமன் நாட்டினால் வழங்கப் பட்டது (சோகோட்ராவில் உள்ள டெட்வா ஏரியைக் குறிக்கிறது).
  • உலக வானிலை அமைப்பின் (WMO) விதிகளின்படி, மணிக்கு 63 கிமீ வேகத்தில் காற்று வீசியதை அடுத்து அது ஒரு புயலாக மாறியது.
  • இந்தப் புயல் ஆனது கடலோர இலங்கை வழியாகவும், தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்திற்கு அருகில் தென்மேற்கு வங்காள விரிகுடாவை நோக்கியும் நகர்ந்தது.
  • இது 2025 ஆம் ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதத்தில் பருவமழைக்குப் பிந்தையதாக ஏற்பட்ட மூன்றாவது வங்காள விரிகுடா புயலாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்