தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் அலுவலகம்
November 14 , 2019 2093 days 724 0
இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் அலுவலகமானது தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் உள்ள ஒரு பொது ஆணையம் என்று இந்திய உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த முக்கியமானத் தீர்ப்பானது இந்தியத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வினால் அறிவிக்கப்பட்டது.
நியமனம் செய்வதற்காக கொலீஜியத்தினால் பரிந்துரைக்கப்பட்ட நீதிபதிகளின் பெயர்களை மட்டுமே வெளியிட முடியும் என்றும் அதற்குரிய காரணங்களை வெளியிட முடியாது என்றும் உச்ச நீதிமன்ற அமர்வு கூறியுள்ளது.
முன்னதாக, 2010 ஆம் ஆண்டு ஜனவரி 10 அன்று, இந்தியத் தலைமை நீதிபதியின் அலுவலகமானது தகவல் அறியும் உரிமை (Right to Information - RTI) சட்டத்தின் வரம்பிற்குள் வரும் என்று தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அதன் பின்னர் உயர் நீதிமன்றம் மற்றும் மத்திய தகவல் ஆணையத்தின் (central information commission's - CIC's) உத்தரவுகளுக்கு எதிராக உச்ச நீதிமன்ற தலைமைச் செயலாளர் மற்றும் அதன் மத்தியப் பொது தகவல் அதிகாரி ஆகியோரால் 2010 ஆம் ஆண்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் அலுவலகத்தினை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கையானது தகவல் அறியும் ஆர்வலரான எஸ்.சி.அகர்வால் என்பவரால் தொடங்கப்பட்டது.