கிராமப்புற மற்றும் விவசாய நிதி தொடர்பான 6வது உலக மாநாடு
November 14 , 2019 2093 days 740 0
கிராமப்புற மற்றும் விவசாய நிதி தொடர்பான 6வது உலக மாநாடானது சமீபத்தில் புது தில்லியில் நடத்தப்பட்டது.
இது ஆசிய - பசிபிக் கிராம மற்றும் வேளாண் கடன் சங்கம் (APRACA - Asia-Pacific Rural and Agricultural Credit Association), தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (National Bank for Agriculture and Rural Development - NABARD) மற்றும் இந்திய அரசின் மத்திய வேளாண் துறை அமைச்சகம் ஆகியவற்றால் இணைந்து நடத்தப் படுகின்றது.
இந்த மாநாட்டின் 6வது பதிப்பில், கிராமப்புற மற்றும் விவசாய நிதிகளின் சாத்தியமானப் பங்களிப்புகளைக் களைவதற்காக நடத்தப்படும் ஊடாடும் விவாதங்களில் ஈடுபடும் உலகெங்கிலுமிருந்து 300 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.