பஞ்சாபின் குருதாஸ்பூரில் உள்ள கர்தார்பூர் சாஹிப் பெருவழிப் பாதையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை பிரதமர் திறந்து வைத்தார்.
கர்தார்பூர் பெருவழிப் பாதையானது பாகிஸ்தானில் உள்ள குருத்வாரா தர்பார் சாஹிப்பை இந்தியாவின் பஞ்சாபில் உள்ள தேரா பாபா நானக் ஆலயத்துடன் இணைக்கின்றது.
கர்தார்பூர் பெருவழிப் பாதையானது பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான் அவர்களால் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 9 அன்று திறக்கப்பட்டது. இத்தினமானது பெர்லின் சுவர் இடிப்பின் நினைவு தினத்தைக் குறிக்கின்றது.
பாகிஸ்தான் - இந்தியா எல்லையிலிருந்து 4.7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கர்தார்பூரில் அமைந்திருக்கும் குருத்வாராவை இந்தியாவில் இருக்கும் சீக்கிய மதம் சார்ந்த பக்தர்கள் நுழைவு இசைவு இல்லாமல் சென்று வர அனுமதிக்கும் நோக்கில் இந்த நடைபாதையானது அமைக்கப்பட்டுள்ளது.
குரு நானக் தேவ் என்பவர் 1539 ஆம் ஆண்டில் தான் இறக்கும் வரை, மொத்தம் 18 ஆண்டுகள் கர்தார்பூரில் உள்ள குருத்வாரா தர்பார் சாஹிப்பில் வாழ்ந்தார்.
மேலும் இது உலகின் மிகப்பெரிய குருத்வாராவாகவும் விளங்குகின்றது.