இந்திய அரசானது தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021 ஐ பிப்ரவரி 20, 2026 முதல் அமல் படுத்துகிறது.
செயற்கையாக உருவாக்கப்பட்ட தகவல் (SGI) என்பது உண்மையானதாக தோன்றும்AI-யால் உருவாக்கப்பட்ட அல்லது AI-யால் மாற்றப்பட்ட ஒலி , காணொளி அல்லது ஒலி-ஒளி உள்ளடக்கத்தை உள்ளடக்கியது.
AIயால் உருவாக்கப்பட்ட அனைத்து உள்ளடக்கத்திலும் வெளிப்படையான பொறுப்புத் துறப்பு அல்லது அடையாளக் குறியீடுகள் இருக்க வேண்டும் என்பதோடுமேலும் சட்டவிரோதப் பதிப்புகள் 3 மணி நேரத்திற்குள் அகற்றப்பட வேண்டும்.
குழந்தைகள் பாலியல் வன்கொடுமை பதிவுகள் (CSAM), சம்மதமில்லாத நெருக்கமான படங்கள் (NCII), ஆள்மாறாட்டம் மற்றும் பொது பாதுகாப்பை அச்சுறுத்தும் பதிவுகள் ஆகியவை தடை செய்யப் பட்டுள்ளன.
AI-வழி பதிவுகளின் தோற்றத்தைக் கண்டறிய மெட்டா டேட்டா மற்றும் டிஜிட்டல் தடயங்கள் உட்பொதிக்கப்பட்டுள்ளன என்பதோடுவழக்கமான திருத்தங்கள் மற்றும் அணுகல் அம்சங்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்படுகின்றன.