TNPSC Thervupettagam

தஞ்சாவூரில் தொல்பொருள் கண்டுபிடிப்புகள்

September 11 , 2026 2 days 61 0
  • தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால செப்பு நாணயம் மற்றும் பழங்கால பல்லவர் கால சிவலிங்கம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • 3.30 கிராம் எடையுள்ள இந்தச் செப்பு நாணயம் முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியனுக்கு (பொ.ஆ 1250–1284) சொந்தமானது என்றும், இது அவரது முதல் ஆட்சி ஆண்டான பொது ஆண்டு 1251-இல் வெளியிடப்பட்டது என்றும் அடையாளம் காணப் பட்டு ள்ளது.
  • நாணயத்தின் முன்பக்கத்தில் ஒரு மனித உருவமும், பின்பக்கத்தில் இரண்டு விளக்குகளுக்கு இடையே செங்குத்தாக வைக்கப்பட்ட மீன் உருவமும் காணப் படுகிறதுடன் மேலும் "எல்லாந்தலையனான்" என்ற தமிழ் வாசகமும் இடம் பெற்று உள்ளது.
  • சுமார் 3 அடி உயரமும், நீளமும், அகலமும் கொண்ட ஒரு பெரிய சிவலிங்கம் அருகிலுள்ள தோப்பில் கண்டெடுக்கப்பட்டதுடன் இது பல்லவர் காலத்தைச் சேர்ந்தது என்று நம்பப் படுகிறது.
  • சோழர்கள், பல்லவர்கள், முத்தரையர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள் மற்றும் மராட்டியர்கள் வரலாற்று ரீதியாக ஆட்சி செய்த பகுதியான இளங்காடு மற்றும் நியமம் கிராமங்களுக்கு இடைப்பட்ட செங்கமேடு மேட்டிலிருந்து இந்தக் கண்டு பிடிப்புகள் பதிவாகியுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்