TNPSC Thervupettagam

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பணியாளர்கள்

September 11 , 2026 2 days 32 0
  • தமிழ்நாடு முழுவதும் உள்ள 25 மாநகராட்சிகள், 145 நகராட்சிகள் மற்றும் 479 பேரூராட்சிகளுக்கு பணியாளர்களை நியமிக்கும் அதிகாரத்தை தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையத்திற்கு (TNPSC) வழங்க முன்மொழிந்துள்ளது.
  • இது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நியமனங்களை ஒரு பொதுவான தேர்வு முறையின் கீழ் கொண்டுவரும்.
  • தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையம் (கூடுதல் பணிகள்) சட்டம், 2022-ஐ திருத்துவதற்கான மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
  • TNPSC மூலம் பல மாநில அரசுப் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைபெறுவதைப் போலல்லாமல், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நியமனங்கள், பதவி மற்றும் சேவையைப் பொறுத்து வெவ்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி வருகின்றன. இதில், நகராட்சி நிர்வாக இயக்குநரகம், நகராட்சி ஆணையர்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்வு / நியமனக் குழுக்களிடையே ஆட்சேர்ப்பு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப் பட்டு உள்ளன.
  • முன்மொழியப்பட்ட இந்தத் திருத்தம், இந்த ஆட்சேர்ப்புகளை TNPSC தலைமையிலான ஒரு பொதுவான வழிமுறையின் கீழ் கொண்டுவர முயல்கிறது என மூத்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
  • இந்த மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைத்தவுடன், சென்னை மாநகராட்சி மற்றும் பிற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான ஆட்சேர்ப்புப் பொறுப்பை அரசு TNPSC-யிடம் ஒப்படைக்க முடியும்.
  • எனவே, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வேட்பாளர் ஆட்சேர்ப்புப் பொறுப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் (TNPSC) ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளது.
  • இதற்காக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு கூடுதல் பணிகளை வழங்கிய 2022 ஆம் ஆண்டு சட்டத்தின் செயல்பாட்டு எல்லையை இந்த மசோதா விரிவுபடுத்த முயல்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்