TNPSC Thervupettagam

தடுக்கக்கூடிய தாய் – சேய் இறப்புகள் : சுழிய நிலை

October 11 , 2019 2125 days 863 0
  • மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் பல்வேறு மாநில சுகாதார அமைச்சர்களுடன் இணைந்து சுரக்ஷித் மாத்ரித்வா ஆஷ்வாசன் (சுமன்) என்ற ஒரு முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளார்.
  • சுமன் என்ற முன்னெடுப்பானது தடுக்கக்கூடிய, தாய் & புதிதாகப் பிறந்த குழந்தைகளின் இறப்புகளை சுழிய நிலைக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது பொது சுகாதார நிலையத்திற்கு வருகை தரும் ஒவ்வொரு பெண்ணுக்கும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கும் சேவைகள் மறுக்கப்படுவதை சுழிய அளவிற்குத் தடுத்தல் மற்றும் எந்தவொரு கட்டணமுமின்றி கண்ணியமான, மரியாதைக்குரிய & தரமான சுகாதார சேவைகளை உறுதி செய்தல் ஆகியவற்றிற்கு முயற்சிக்கின்றது.
  • இந்தத் திட்டத்தின் மூலம் பொது சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அவர்களுக்கு இலவசப் பிரசவம்  மற்றும் அறுவை சிகிச்சை போன்ற வசதிகள் வழங்கப்படும்.
  • இதன் மூலம் பிரசவத்திற்குப் பிறகு 6 மாதங்கள் வரை கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு இலவச சுகாதார நலன்கள் வழங்கப்படும்.
  • இத்திட்டத்தினால் புதிதாகப் பிறந்த, நோய்வாய்ப்பட்ட குழந்தைகளும் இலவச சுகாதார நலன்களைப் பெற்றுப் பயனடைவர் .

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்