இந்தியத் தணிக்கை மற்றும் கணக்குத் துறையில் (IA&AD) இரண்டு புதிய பணியாளர் பிரிவுகளை உருவாக்க இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG) அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது.
அவை மத்திய வருவாய் தணிக்கை (CRA) பிரிவு மற்றும் மத்திய செலவின தணிக்கை (CEA) பிரிவு என அழைக்கப்படும்.
மத்திய அரசு நிதிகளைத் தணிக்கை செய்வதில் தனது பெரும் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதற்காகவும், அதன் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் மேற் கொள்ளப் பட்ட இந்தச் சீர்திருத்தம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.