தனிநபர் வருமான வரி வசூல் ஆனது, இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக பெருநிறுவன வரிகளை விஞ்சியுள்ளது.
2014 ஆம் நிதியாண்டில் 38.1 சதவீதமாக இருந்த மொத்த நேரடி வரிகளில் தனிநபர் வருமான வரியின் பங்கு 2024 ஆம் நிதியாண்டில் 53.4 சதவீதமாகக் கடுமையாக உயர்ந்தது.
அதே காலக் கட்டத்தில் பெருநிறுவன வரிகள் 61.9 சதவீதத்திலிருந்து 46.6 சதவீதமாகக் குறைந்துள்ளன.
தனிநபர் வருமான வரித் தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 2.3 மடங்கு அதிகரித்து, 2014 ஆம் நிதியாண்டில் 30.5 மில்லியனிலிருந்து 2023 ஆம் நிதியாண்டில் 69.7 மில்லியனாக உயர்ந்துள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டில் 12.4 மில்லியனிலிருந்து 2024 ஆம் ஆண்டில் 14.7 மில்லியனாக உயர்ந்துள்ளது.