TNPSC Thervupettagam

தன்னாட்சி ஆணையங்களுக்கு அதிகாரம்

January 29 , 2019 2380 days 704 0
  • வடகிழக்கு இந்தியாவில் 6-வது அட்டவணையின் கீழ் உள்ள 10 தன்னாட்சி மன்றங்களின் பொருளாதார மற்றும் செயலாக்க அதிகாரம் ஆகியவற்றை அதிகரிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • நிதி ஆணையமானது இந்த தன்னாட்சி மன்றங்களுக்கு நிதி ஆதாரங்களை பகிர்ந்தளிக்க பரிந்துரை செய்யுமாறு கட்டாயப்படுத்தப்படும்.
  • இதுவரை இந்த தன்னாட்சி மன்றங்களானது குறிப்பிட்ட திட்டங்களுக்கான நிதியுதவிகளுக்காக மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளைச் சார்ந்துள்ளது.
  • அஸ்ஸாம், மிசோரம், திரிபுரா ஆகிய 6-வது அட்டவணையில் உள்ள மாநிலங்களில் உள்ள கிராமங்கள் மற்றும் நகராட்சிகளில் குறைந்தபட்சம் 1/3 இடங்கள் மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
  • இந்த சட்டத் திருத்தமானது கூடுதலாக 30 துறைகளை கீழ்க்காணும் மன்றங்களுக்கு மாற்ற முற்படுகிறது.
    • கர்பி ஆங்க்லாங் பிராந்திய தன்னாட்சி சபை மற்றும்
    • அஸ்ஸாமின் திமா ஹசோ பிராந்திய தன்னாட்சி மன்றம்
  • முன்மொழியப்பட்ட இத்திருத்தங்களானது, தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமப்புற, நகராட்சி சபைகளுக்கு மக்களாட்சியை கீழ்நிலை வரை உறுதிப்படுத்துவதற்காக வழங்கப்படுகின்றன.
  • அஸ்ஸாம், மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களின் தேர்தல் ஆணையங்களானது இந்த தன்னாட்சி மன்றங்கள், கிராமப்புற மற்றும் நகராட்சி சபைகளுக்கான தேர்தல்களை நடத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்