2022 நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை வழங்கும் போது இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டது.
இது தகுதியற்ற மற்றும் அதிகளவில் மாசுபடுத்தும் வாகனங்களை அகற்ற உதவும்.
குறைந்த எரிபொருளைப் பயன்படுத்துகின்ற மற்றும் சுற்றுச்சூழலிற்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வாகனங்களை ஊக்குவிக்கவும் இது உதவும்.
இதனால், இது வாகன மாசுபாட்டையும் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிக் கட்டணங்களையும் குறைக்கும்.
தகுதிச் சோதனைகளின் அடிப்படையில் இந்த தன்னார்வ வாகன உடைப்புக் கொள்கை இருக்கும்.
இதில் தனிப்பயன் வாகனங்கள் என்றால் அதன் ஆயுட்காலம் 20 ஆண்டுகளாகவும், வணிக வாகனங்களுக்கு அதன் ஆயுட்காலம் 15 ஆண்டுகளாகவும் வேண்டி நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
இந்தக் கொள்கை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குச் சொந்தமான வாகனங்களுக்கு 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் பொருந்தும்.