இந்திய-அமெரிக்க கூட்டு இராணுவப் பயிற்சியான ‘யுத் அபியாஸின்’ 16வது பதிப்பு ராஜஸ்தானில் நடத்தப்பட இருக்கின்றது.
பிரான்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் விமானப் படைகள் ராஜஸ்தானில் 5 நாள் கூட்டுப் பயிற்சியை நடத்திய அடுத்த சில நாட்களில் இந்தப் பயிற்சியானது துவங்க உள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டு இராணுவப் பயிற்சியானது இரு படைகளுக்கிடையேயான இயங்குந்தன்மை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது ஐக்கிய நாடுகள் சபையின் கட்டளைகளின் கீழ் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மீதும் கவனம் செலுத்தும்.