தபால் துறையில் மையப்படுத்தப்பட்ட பொது மக்கள் குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பை (Centralised Public Grievances Redress and Monitoring System - CPGRAMS) பணியாளர், பொது மக்கள் குறைபாடு மற்றும் ஓய்வூதியங்கள் துறையின் இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வெளியிட்டுள்ளார்.
நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறைபாட்டுத் துறையின் புதிய CPGRAMS 7.0 என்ற பதிப்பை www.pgportal.nic.in என்ற இணைய வாயிலின் மூலம் அணுக முடியும்.
பொது மக்களிடம் இருந்து குறைகளைப் பெற்று, நிவர்த்தி செய்து அதனைக் கண்காணிக்கும் ஒரு இணையதள நடைமுறை இதுவாகும்.
இது தபால் துறையின்செயலாக்க நேரத்தில் 50 சதவிகிதத்தைக் குறைக்கும்.