தமிழகத்திலிருந்து புதிய மாநிலங்களவை உறுப்பினர்கள் 2026
March 12 , 2026 5 days 88 0
தமிழகத்திலிருந்து மாநிலங்களவையில் ஏற்படவுள்ள ஆறு காலி இடங்களை (தற்போதைய உறுப்பினர்களின் பதவிக்காலம் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதியில் முடிவடைகிறது) நிரப்ப, ஆறு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.
திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் (திமுக), எம். கிறிஸ்டோபர் திலக் (காங்கிரஸ்), எல். கே. சுதீஷ் (தேமுதிக), எம். தம்பிதுரை (அதிமுக), மற்றும் அன்புமணி ராமதாஸ் (பாமக) ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஆவர்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் பிரிவு 53(2) மற்றும் தேர்தல் நடத்தும் விதிகள், 1961-ன் விதி 11(1)-ன் படி, தேர்தல் நடத்தும் அலுவலர் R. சாந்தி இவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டதாக அறிவித்தார்.
மாணிக்கம் மற்றும் சுதீஷ் ஆகியோர் முதல்முறையாக மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
தமிழகத்திற்கு மாநிலங்களவையில் மொத்தம் 18 இடங்கள் உள்ளன.
மாநிலங்களவைத் தேர்தல்கள் வெளிப்படையான வாக்குச்சீட்டு (open ballot) முறையைப் பயன்படுத்துகின்றன, இதில் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தங்கள் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட முகவரிடம் வாக்கைக் காண்பித்த பின்னரே அதைப் பதிவு செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்யத் தவறினால் அந்த வாக்கு செல்லாததாகிவிடும்.
சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் ரகசியமாக வாக்களிக்கலாம்.
இந்தத் தேர்தல் ஒற்றை மாற்றத் தக்க வாக்கு (STV) மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையைப் பின்பற்றுகிறது.
முதல் சுற்றில், அனைத்து முதல் விருப்ப வாக்குகளும் எண்ணப்படும்.
மொத்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிடைக்கக்கூடிய இடங்களைக் கொண்டு கணக்கிடப்படும் ஒரு குறிப்பிட்ட இலக்கை (Quota) எட்டும் வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.
நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிக வாக்குகளைப் பெறும் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார்கள்.
உபரி வாக்குகள் அடுத்த விருப்ப வேட்பாளர்களுக்கு மாற்றப்படும்.
இடங்கள் நிரப்பப் படாவிட்டால், மிகக் குறைந்த வாக்குகள் பெற்ற வேட்பாளர் நீக்கப் பட்டு, அவரது வாக்குகள் மறுபகிர்வு செய்யப்படும்.