TNPSC Thervupettagam

தமிழகப் பொருளாதாரத்தின் சிறப்பம்சங்கள்

February 6 , 2026 11 days 111 0
  • இந்தியப் பொருளாதார ஆய்வறிக்கை (2025-26) முதலீட்டுக்குத் தயாராக, தொழில்துறையில் முதன்மையான மாநிலமாக தமிழ்நாட்டின் நிலையை வலுப் படுத்துகிறது.
  • தமிழ்நாடு வேகமாக வளரும் மாநிலப் பொருளாதாரமாகத் தனித்து நிற்கிறது என்பதோடு, 2024–25 ஆம் ஆண்டில் 11.19% உண்மையான வளர்ச்சியைப் பதிவு செய்கிறது.
  • இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலப் பொருளாதாரமாக, தமிழ்நாடு தேசிய வளர்ச்சிக்கும் முக்கியப் பங்களிப்பை அளிக்கிறது.
  • இந்தச் செயல்திறன் முதன்மையாக 13.43% வளர்ச்சி என்ற நிலையில் இரண்டாம் நிலைத் துறையால் இயக்கப்படுகிறது, இது.
  • இதில், உற்பத்தி ஒரு முக்கிய வளர்ச்சி இயந்திரமாக உருவெடுத்துள்ளது என்பதோடு இது 14.74% உண்மையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்ற நிலையில் இது அகில இந்திய சராசரியான 4.5% ஐ விட மூன்று மடங்கு அதிகம்.
  • ஒவ்வொரு மாநிலத்தின் மத்தியிலும் தமிழ்நாடு நான்கு ஆண்டு சராசரி உண்மையான உற்பத்தி வளர்ச்சியில் (2021-22 முதல் 2024-25 வரை) 9.38% என்ற அளவில் தலைமை தாங்குகிறது, அதே நேரத்தில் அதன் ஒட்டுமொத்த GSDP 8.63% என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது.
  • முதன்மையான CPI பணவீக்கம் 2025-26 இல் (டிசம்பர் வரை) 2.45% ஆகக் குறைந்துள்ளது.
  • 2020-21 ஆம் ஆண்டில் 26.15 பில்லியன் டாலரிலிருந்து 2024-25 ஆம் ஆண்டில் 52.07 பில்லியன் டாலராக இம்மாநிலத்தின் பொருட்கள் ஏற்றுமதி கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.
  • சிமென்ட் துறையில் 85% குவிந்துள்ள சில மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும்.
  • மருத்துவச் சாதனப் பூங்காக்களை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் மருத்துவச் சாதனப் பூங்காவை நிறுவ ₹100 கோடி நிதி உதவிக்கு இறுதி ஒப்புதல் பெற்ற மூன்று மாநிலங்களில் இதுவும் ஒன்றாகும்.
  • இந்தியாவின் உற்பத்தி வேலைவாய்ப்பில் தமிழ்நாடு 15% பங்களிக்கிறது என்று கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
  • இது அனைத்து மாநிலங்களிலும் மிக உயர்ந்தது.
  • குஜராத் (13%), மகாராஷ்டிரா (13%) மற்றும் உத்தரப் பிரதேசம் (8%) ஆகியவற்றையும் தமிழ்நாடு விஞ்சியுள்ளது.
  • வணிகச் சீர்திருத்தச் செயல் திட்டம் (BRAP) 2024 இன் கீழ், சூரிய சக்திப் பூங்காக்கள், மாவட்ட அளவிலான கார்பனைசேஷன் திட்டங்கள் மற்றும் எரிசக்தி-திறன் திட்டங்கள் மூலம் ஒற்றைச் சாளர அனுமதிகள், டிஜிட்டல் மயமாக்கப்பட்ட ஒப்புதல்கள் மற்றும் நில சீர்திருத்தங்கள் மூலம் வணிகம் செய்வதை எளிதாக்கியுள்ளது.
  • தேசியப் பசுமை ஹைட்ரஜன் திட்டத்தின் கீழ் உள்ள மூன்று பசுமை ஹைட்ரஜன் மையங்களில் ஒன்றாக வ.உ. சிதம்பரனார் துறைமுகம் தேர்ந்தெடுக்கப் பட்டதன் மூலம், இந்தியாவின் பசுமை ஹைட்ரஜன் பொருளாதாரத்தில் தமிழ்நாடு ஒரு முக்கியப் பங்கைப் பெற்றுள்ளது.
  • 2030 ஆம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் ஐந்து மில்லியன் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும் இந்தியாவின் இலக்கில் இது முன்னணியில் உள்ளது.
  • சென்னை-வேலூர்-விழுப்புரம்-செங்கல்பட்டு வழித்தடம் ஒரு சாத்தியமான பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு பாதையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
  • 14 கடலோர மாவட்டங்களில் 1,076 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரையில் காலநிலைப் பாதிப்புகளை நிவர்த்தி செய்யும் தமிழ்நாடு நிலையான பெருங்கடல் வளங்கள் மற்றும் நீல பொருளாதாரத் திட்டத்தை இந்த கணக்கெடுப்பு கவனத்தில் கொள்கிறது.
  • கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகியவை இந்தியாவின் சேவை உற்பத்தியில் கிட்டத்தட்ட 40% அளவிற்குப் பங்களிக்கின்றன என்பதையும் இது குறிப்பிடுகிறது.
  • மேம்பட்ட வகைகள், பல பயிர்ச் சுழற்சிகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் மீதான நிலையான கொள்கை கவனம் காரணமாக, குஜராத் மற்றும் கர்நாடகாவுடன் இணைந்து நிலக்கடலை உற்பத்தியில் அதிக செயல்திறன் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
  • வாழை சாகுபடியில் அதன் சாதனைகள் தோட்டக்கலையில் பிராந்திய-குறிப்பிட்ட வெற்றிக் கதைகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
  • நகர்ப்புற மேம்பாட்டில், சென்னை உலகின் மிகப்பெரிய நகர்ப்புற ஒருங்கிணைப்புகளில் ஒன்றாக இருப்பதாக கணக்கெடுப்பு எடுத்துக்காட்டுகிறது.
  • சென்னையின் பெருநகரப் பகுதி வாகன நிறுத்துக் கொள்கை 2025 என்பது ஒரு தேசிய சிறந்த நடைமுறையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • மேலும் இந்தியா டுடே பத்திரிக்கையின் மொத்த உள்நாட்டு நடத்தைக் கணக்கெடுப்பில் குடிமை நடத்தையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
  • உயர்கல்வியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 நிறுவனங்கள் NIRF 2025 முதல் 100 ஒட்டு மொத்தத் தரவரிசையில் இடம் பெற்றுள்ளன என்ற நிலையில் இது அனைத்து மாநிலங்களிலும் மிக உயர்ந்தது.
  • ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் 2024 இல் தொடங்கப்பட்ட திறன் உத்தரவாதம் திட்டமும் பிற்படுத்தப் பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்