TNPSC Thervupettagam

தமிழை அலுவல் மொழியாகப் பயன்படுத்துதல்

April 20 , 2025 10 days 78 0
  • தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல்தொடர்புத் துறையால் தற்போது ஓர் பரிந்துரையானது வெளியிடப் பட்டுள்ளது.
  • இது கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், செயலாளர்கள், தலைமைச் செயலகத்தில் உள்ள துறைகள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கு அனுப்பப் பட்டுள்ளது.
  • இந்தப் பரிந்துரையில், அதிகாரப்பூர்வத் தகவல் தொடர்புகள் மற்றும் செயல்பாடுகள் அனைத்திலும் தமிழ் மொழியைப் பயன்படுத்துவதற்காக வேண்டி ஏற்கனவே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அவர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
  • அரசு ஆணைகள் அனைத்தும் தமிழ் மொழியில் மட்டுமே பிறப்பிக்கப் பட வேண்டும் என்றும், சுற்றறிக்கைகளும் தமிழ் மொழியில் இருக்க வேண்டும் என்றும் முந்தைய சில உத்தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • விலக்கு அளிக்கப்பட்ட விவகாரங்களைத் தவிர, மற்ற அனைத்துக் கடிதங்கள், தகவல் தொடர்புகள் மற்றும் கடிதப் பரிமாற்றங்களும் தமிழ் மொழியில் மட்டும் தான் இருக்க வேண்டும்.
  • பொதுமக்களிடம் இருந்து தமிழ் மொழியில் பெறப்படும் கடிதங்களுக்கு, தமிழிலேயே பதில் அளிக்க வேண்டும்; மற்றும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும் தமிழில் இருக்க வேண்டும்.
  • அரசு ஊழியர்கள் இனி அனைத்துக் கடிதங்களிலும், தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும்.
  • மேலும், குறிப்பிடப்பட்ட கடிதங்கள் மற்றும் அரசு ஆணைகளை ஆங்கில மொழியில் வழங்குவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • தலைமைச் செயலகத்தில் உள்ள துறைகள், இவற்றைத் தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்புத் துறையின் மொழிபெயர்ப்புப் பிரிவுக்கு அனுப்பி அவற்றை இனி தமிழில் மொழி பெயர்க்க வேண்டும்.
  • 1956 ஆம் ஆண்டு அலுவல் மொழிச் சட்டத்தின் படி, தமிழ் மொழியானது தமிழ்நாடு அரசின் ஆட்சி மொழியாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்