TNPSC Thervupettagam

தமிழ்நாடு அரசு ஆணை - வெளிப்படைத்தன்மை விவகாரம்

July 12 , 2026 2 days 48 0
  • புதிய அரசு பதவியேற்ற பிறகு, தமிழக அரசின் பெரும்பாலான துறைகள் தங்கள் சமீபத்திய அரசாணைகளை (G.O.s) அதிகாரப்பூர்வ அரசு இணையதளத்தில் பதிவேற்ற வில்லை.
  • மொத்தமுள்ள 38 துறைகளில் 5 துறைகள் மட்டுமே மே–ஜூன் 2026-க்கான அரசாணைகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.
  • 'சிங்கப்பெண்' சிறப்புப் படை மற்றும் தகுதியுள்ள வீட்டு உபயோக மின் நுகர்வோருக்கு வழங்கப்படும் கூடுதல் 100 இலவச மின்சார அலகுகள் தொடர்பானவை உட்பட, முக்கியமான அரசாணைகள் இணையத்தில் பதிவேற்றப்பட வில்லை.
  • ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை, கூட்டுறவுத் துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, நிதித் துறை மற்றும் பொதுத் துறை ஆகியவை தங்கள் அரசாணைகளைப் புதுப்பித்துள்ளன.
  • சில துறைகள் தங்கள் அரசாணைகளைப் பல ஆண்டுகளாகப் புதுப்பிக்கவில்லை; குறிப்பாக, பொதுத் (தேர்தல்) துறை 2015-க்குப் பிறகு எந்தப் புதிய அரசாணையையும் வெளியிடவில்லை.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்