TNPSC Thervupettagam

தமிழ்நாடு சிங்கப்பெண்கள் தொழில்முனைவோர் கடன் திட்டம்

August 4 , 2026 21 hrs 0 min 79 0
  • கூட்டுறவுக் கடன்களை அதிகரிப்பதன் மூலமும், பயனாளிகளின் வரம்பை விரிவுபடுத்துவதன் மூலமும் சிங்கப்பெண்கள் தொழில்முனைவோர் கடன் திட்டத்தை விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
  • கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்கள் மூலம் இத்திட்டத்தின் கீழான கடன்களை 25% அதிகரிக்குமாறு அதிகாரிகளுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
  • தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக, சுயஉதவிக் குழுக்களுக்கு (SHGs) மட்டுமின்றி, இளைஞர்கள் மற்றும் விளிம்புநிலை மக்களையும் இத்திட்டம் இனி உள்ளடக்கும்.
  • அனைத்துப் பிரிவுகளிலும் குறைந்தது 30% கடன்கள் புதிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • இத்திட்டம் கூட்டுறவுத் துறையின் மூலம் கடன்கள் கிடைப்பதை மேம்படுத்துவதையும், மாநிலம் முழுவதும் தொழில்முனைவை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்