TNPSC Thervupettagam

தமிழ்நாடு சிறைச்சாலைகள் (இடைவிடுப்பு) விதிகள், 2026

February 22 , 2026 12 hrs 0 min 24 0
  • மாநில அரசு, தண்டனை பெற்றவர்களுக்கு இடைவிடுப்பு அளிப்பதற்கான புதிய விதிகளை அறிவித்துள்ளது.
  • புதிய விதிகளின் கீழ், இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப் பாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும் தேசத் துரோகச் செயல்களுக்காக தண்டனை பெற்ற கைதிகள் விடுப்பில் செல்ல தகுதியற்றவர்கள்.
  • பாலியல் குற்றங்களுக்காக தண்டனை பெற்ற கைதிகள் மற்றும் தண்டனை பெற்ற வெளிநாட்டு கைதிகள் விடுப்பில் செல்ல தகுதியற்றவர்கள்.
  • பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (POCSO) சட்டம், 2012 இன் கீழ் தண்டனை பெற்ற கைதிகள் விடுப்பில் செல்ல தகுதியற்றவர்கள்.
  • போதை மருந்துகள் மற்றும் மனோவியல் பொருட்கள் (NDPS) சட்டம், 1985 இன் பிரிவுகள் 19, 20(ii)(c), 21(c), 22(c), 23(c), 24, மற்றும் 27A இன் கீழ் தண்டனை பெற்ற கைதிகள் விடுப்பில் செல்ல தகுதியற்றவர்கள்.
  • கடந்த ஐந்து ஆண்டுகளில் தாக்குதல், எழுச்சி, கலகம், கிளர்ச்சி மற்றும் தப்பிச் செல்வது போன்ற சிறைக் குற்றங்களில் ஈடுபட்ட கைதிகள் விடுப்புக்குத் தகுதி அற்றவர்கள்.
  • எந்தவொரு தண்டனைக் கைதியும் இடைவிடுப்பு பெறுவதை ஒரு உரிமையாகக் கோர முடியாது  என்று விதிகள் கூறுகின்றன.
  • ஒரு தண்டனைக் கைதி 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை திருப்திகரமான நடத்தையுடன் முடித்த பின்னரே இடைவிடுப்புக்கு தகுதி பெறுகிறார்.
  • குற்றத்தின் தன்மை, கடந்த கால குற்றப் பதிவு, சிறையில் நடத்தை மற்றும் முந்தையத் தற்காலிக விடுதலையின் போது இணக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் விடுப்புக்கான தகுதி தனித்தனியாக மதிப்பிடப்படும்.
  • சிறைச்சாலைகள் பொது இயக்குநர் ஒரு வருடத்தில் 60 நாட்களுக்கு மிகாமல் இடை விடுப்பு வழங்கலாம்.
  • மறுவாழ்வு காரணங்களுக்காக மாநில அரசு ஒரு வருடத்தில் கூடுதலாக 60 நாட்கள் விடுப்பை அனுமதிக்கலாம் என்பதோடு அதை எழுத்துப் பூர்வமாகவும் பதிவு செய்ய வேண்டும்.
  • விடுப்பில் செலவிடப்பட்ட காலம் குற்றவாளியின் தண்டனைக் காலத்துடன் சேர்த்து கணக்கிடப் படும்.
  • தண்டனைக் காலத்தை ரத்து செய்தல், முன்கூட்டியே விடுதலை செய்தல் மற்றும் பொருந்தக்கூடிய இடங்களில் பிற சட்டப்பூர்வச் சலுகைகளுக்கு விடுப்பு காலம் கணக்கிடப் படும்.
  • விடுப்புக் காலத்தின் போது தண்டனைக் கைதி காவல்துறை அல்லது நன்னடத்தை அதிகாரிகளின் மேற்பார்வையில் இருப்பார்.
  • பொது இயக்குநர் அல்லது அரசாங்கத்தால் எந்த நேரத்திலும் இடைவிடுப்பு ரத்து செய்யப் படலாம்.
  • கூடுதல் விடுப்பு எடுத்தல் அல்லது நிபந்தனைகளை மீறுதல் ஏற்பட்டால், கைதி பிடியாணை இல்லாமல் கைது செய்யப்படலாம் மற்றும் எதிர்காலத்தில் இடைவிடுப்பு மறுக்கப் படலாம்.
  • நோய்கள், முதுமை அல்லது பிற பதிவு செய்யப்பட்ட காரணங்களுக்காக அரசாங்கம் எந்தவொரு நபருக்கும் இந்த விதிகளின் விதிகளிலிருந்து விலக்கு அளிக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்