TNPSC Thervupettagam

தமிழ்நாடு தொழில்துறை பூங்காக்கள்

August 29 , 2026 15 days 94 0
  • மாநிலச் சட்டப்பேரவையில் புதிய தொழில்துறை பூங்காக்கள் மற்றும் தொழிலாளர் தங்கும் வசதி திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்தது.
  • கங்கைகொண்டானில் உள்ள சிப்காட் (SIPCOT) தொழில்துறை பூங்காவில் 2,500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கான வீடுகள் கட்ட ₹130 கோடி செலவிடப்படும்.
  • தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தலில் ₹1,390 கோடி மதிப்பில் 2,570 ஏக்கர் பரப்பளவில் புதிய தூய்மையான மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்துறை பூங்கா உருவாக்கப்படும்.
  • தூத்துக்குடி மாவட்டம் சில்லாநத்தத்தில் ₹774 கோடி மதிப்பில் 1,294 ஏக்கர் பரப்பளவில் மின்சார வாகன (EV) உற்பத்தி பூங்கா அமைக்கப்படும்.
  • புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் சிறிய ஜவுளிப் பூங்காக்களும், விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூர் மற்றும் நாமக்கல் மாவட்டம் லத்துவாடியில் தொழில் துறைப் பூங்காக்களும் அமைக்கப்படும்.
  • குவாண்டம் பாதுகாப்பான மாநிலம் (Quantum Safe State) குறித்த ஆய்வு மற்றும் சிவகாசி பட்டாசு பொது வசதி மையம் ஆகியவையும் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்