TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் சுகாதார மாதிரி

June 2 , 2026 17 days 210 0
  • இந்தியாவின் எளிதில் அணுகக்கூடிய, மலிவான மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த சுகாதார விநியோகத்திற்கு தமிழ்நாட்டின் சுகாதார அமைப்பு ஒரு முன்மாதிரியாக முன்னிலைப்படுத்தப்படுகிறது.
  • அரசு மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகளின் கொள்முதல், சேமிப்பு மற்றும் விநியோகத்தை சீரமைப்பதற்காக 1994 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (TNMSC) நிறுவப்பட்டது.
  • TNMSC மருந்துகளின் இருப்பை மேம்படுத்தியது, விரயத்தைக் குறைத்தது மற்றும் பொதுத்துறை மருந்து கொள்முதலில் தேசிய அளவிலான ஒரு முன்மாதிரியாக மாறியது.
  • பொது சுகாதார உள்கட்டமைப்பை தனியார் துறை பங்களிப்புடன் இணைப்பதன் மூலம் மாநிலம் ஒரு வலுவான சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கியுள்ளது.
  • தமிழ்நாடு ஆரம்ப சுகாதார மட்டத்தில் நோய் கண்டறிதல் சேவைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதோடு இது ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க உதவுகிறது.
  • மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் உள்ளூர் நுண்ணுயிரியல் ஆய்வகங்களில் மேற் கொள்ளப் பட்ட சுமார் ₹360 கோடி முதலீடுகள், கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் சுகாதார அணுகலை மேம்படுத்தியுள்ளன.
  • சுகாதார விநியோகத்தை மேம்படுத்துவதற்காக, செயற்கை நுண்ணறிவு (AI), டிஜிட்டல் சுகாதாரப் பதிவுகள், தொலைதூர மருத்துவம் மற்றும் தொலைதூர நோய் கண்டறிதல் ஆகியவற்றின் பயன்பாட்டை மாநிலம் விரிவுபடுத்தி வருகிறது.
  • தமிழ்நாடு தரவு அடிப்படையிலான சுகாதார நிர்வாகத்தை டிஜிட்டல் பொது சுகாதார அமைப்புகள் மூலம் ஊக்குவிக்கிறது.
  • மாநிலம் அதன் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு சுகாதார நிறுவனங்களுக்காக அறியப்படுகிறது, இது இந்தியா முழுவதிலும் உள்ள நோயாளிகளை ஈர்க்கிறது.
  • நோய் கண்டறிதல், செயற்கை நுண்ணறிவு (AI) உதவி அமைப்புகள் மற்றும் டிஜிட்டல் சுகாதார தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் சுகாதாரப் பணியாளர்களுக்கு தொடர்ச்சியான பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு வழங்குவது முக்கிய கவனமாக உள்ளது.
  • மின்னணு சாதனங்கள், துல்லிய பொறியியல் மற்றும் வாகன உதிரிபாகங்கள் ஆகியவற்றில் உள்ள தனது பலத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மருத்துவ சாதனங்கள் மற்றும் உபகரணங்களுக்கான முக்கிய உற்பத்தி மையமாக மாறும் திறனை தமிழ்நாடு கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்